தற்போதைய செய்திகள்

 ஆத்தூரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது1,200 கிலோ அரிசி பறிமுதல்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரேஷன் அரிசி கடத்தியதாக மூதாட்டி உள்ளிட்ட 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,200 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

க. தங்கராஜா

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரேஷன் அரிசி கடத்தியதாக மூதாட்டி உள்ளிட்ட 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,200 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 இது குறித்து உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:

ஆத்தூர் பகுதியில் பொது வினியோகத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட அரிசியை சிலர் கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து, சேலம் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விநாயகபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது விநாயகபுரம் பிரிவு ரோட்டில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ எடை கொண்ட 24 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஜெயராஜ் (53), கார்த்திக் (26), பெரியம்மாள் (73) ஆகிய மூவரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் பொன்ராஜ் கைது செய்து விசாரித்து வருகிறார்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT